இந்திய, பாகிஸ்தான் எம்பிக்களின் கிரிக்கெட் போட்டி. பாகிஸ்தான் அமைச்சர் யோசனை

இந்திய, பாகிஸ்தான் எம்பிக்களின் கிரிக்கெட் போட்டி. பாகிஸ்தான் அமைச்சர் யோசனை

1உரி தாக்குதலுக்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிறைந்து காணப்படும் நிலையில் இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெறவில்லை.

இந்நிலையில் மீண்டும் இந்த இரு அணிகளும் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் அதற்கு முன்னோடியாக இந்திய, பாகிஸ்தான் எம்பிக்களின் கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் மத்திய அமைச்சரும் பாகிஸ்தான் விளையாட்டுத்துறையின் தலைவராகவும் உள்ள ரியாஸ் பிர்ஸடா அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் எம்பிக்களின் கிரிக்கெட் அணிக்க் இம்ரான்கான் கேப்டனாக இருப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் இந்த யோசனைக்கு இந்திய தரப்பில் இருந்து இதுவரை பதில் எதுவும் வரவில்லை. ஆனால் இந்த போட்டி சாத்தியமற்றது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.