shadow

train-snow-_vbspகனடா மற்றும் அமெரிக்கா நாடுகளில் கடந்த சில நாட்களாக கடும்பனிப்பொழிவு ஏற்பட்டு சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் முழுவதும் தடைபட்டுள்ளது. இதனால் பெருமளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கனடாவில் ஊள்ள ஒரு ரயில் டிரைவர் மிகவும் தைரியமாக பனிக்கட்டிகளுக்கு இடையே ரயிலை செலுத்தியுள்ளார்.

கனடாவில் உள்ள கியூபெக் மாகாணத்தில் ஓடும் ES44DC என்ற சரக்கு ரயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கியூபெக்கில் இருந்து தலைநகர் டொரண்டாவுக்கு சென்றது. அந்த ரயிலை ஓட்டிச்சென்ற டிரைவர் ரயில் பாதையெங்கும் பனிக்கட்டிகளால் சூழ்ந்திருந்ததை கண்டு அஞ்சாமல் மிகவும் தைரியமாக பனிக்கட்டிகளை உடைத்துக்கொண்டு ரயிலை செலுத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று கனடாவில் மட்டுமின்றி உலகமெங்கும் பெரும்பாலானோர்களால் பகிர்ந்து வரப்படுகிறது.

பனிக்கட்டிகளை உடைத்து கொண்டு கம்பீரமாக ஓடும் இந்த ரயில் வீடியோவை அனைவரும் அதிசயத்தோடு பார்த்து வருகின்றனர். சென்னை டுடே நியூஸ் வாசகர்களுக்காக நாமும் அந்த வீடியோவை இங்கு பதிவு செய்துள்ளோம்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1A4L9sZ” standard=”//www.youtube.com/v/Yja2VmZOfdA?fs=1″ vars=”ytid=Yja2VmZOfdA&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep1151″ /]

Leave a Reply