கடந்த சில மாதங்களுக்கு முன்பு மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை 12 ல் இருந்து 9ஆக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. நேற்று நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியின் பரிந்துரையை ஏற்று மீண்டும் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12ஆக உயர்த்துவது என மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

இன்று அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் “மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து மீண்டும் 12ஆக உயர்த்துவதற்கு ராகுல்காந்தி தனிப்பட்ட முறையில் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதால், அவருடைய கோரிக்கையை ஏற்று பிரதமர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

இந்த சலுகையால் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ஆனால் பாரதிய ஜனதா போன்ற எதிர்க்கட்சிகள் வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே ராகுல்காந்திக்கு நடுத்தர வர்க்கத்தினர் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply