shadow

மோடிக்கு ரூ.25 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதா? இமெயில் ஆதாரம் வெளியானதால் பரபரப்பு

1நாட்டில் கருப்புப்பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிக்க பிரதமர் நரேந்திரமோடி எடுத்த அதிரடி நடவடிக்கைகளை நாடே பாராட்டி வரும் நிலையில் அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது ரூ.25 கோடி லஞ்சம் வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி பிர்லா குரூப் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது கைப்பற்றப்பட்ட லேப்டாப்பை ஆய்வு செய்ததில் அதில் ஒரு இமெயிலில் குஜராத் முதல்வருக்கு ரூ.25 கோடி கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் குஜராத் முதல்வராக நரேந்திரமோடி இருந்ததால் அவருக்குத்தான் இந்த பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பாஜக தலைவர்கள் கூறும்போது நரேந்திரமோடியின் புகழுக்கு இழுக்கு சேர்க்கவே பொய்யான ஆதாரங்களை எதிர்க்கட்சிகள் தயார் செய்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலர் இந்த ஆதாரம் உண்மையானது என அடித்து கூறுகின்றனர்.

Leave a Reply