சென்னை சத்யம் சினிமாஸ் உரிமையாளர் வீட்டில் ரெய்டு

சென்னை சத்யம் சினிமாஸ் உரிமையாளர் வீட்டில் ரெய்டு

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறையினர் திடீர் திடீரென சோதனை செய்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று காலை முதல் சென்னை சத்யம் சினிமாஸ் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது.

சமீபத்தில் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால் வணிக வளாகத்தில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சத்யம் சினிமாஸ் அலுவலகத்தில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஜாஸ் சினிமா நிறுவனத்தை சத்யம் சினிமாஸ் நிறுவனத்திடம் இருந்துதான் சசிகலா தரப்பினர் பெற்றனர். இந்த பரிமாற்றங்களில் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் இந்த சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன,.

Leave a Reply