சென்னை ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமானவரித்துறையினர் சோதனை

சென்னை ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமானவரித்துறையினர் சோதனை

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் வருமான வரித்துறையினர் அவ்வப்போது சோதனை செய்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று காலை முதல் சென்னை தி.நகரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜாய் ஆலுக்காஸ் நிறுவனரின் நகைக்கடை, வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடைபெறுகிறது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பிற ஜாய் ஆலுக்காஸ் கிளைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறனர்,.

ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply