தமிழகத்தில் துணை ராணுவம் திடீர் குவிப்பு. பரபரப்பில் தலைமைச்செயலகம்

தமிழகத்தில் துணை ராணுவம் திடீர் குவிப்பு. பரபரப்பில் தலைமைச்செயலகம்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சமீபத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பின்னர் தமிழகம் பரபரப்பு அடைந்துள்ளது. இன்று காலை முதல் தலைமைச்செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது தலைமைச்செயலகத்தில் உள்ள தலைமைசெயலாளர் அறையிலும் சோதனை நடந்து வருகிறது.

இந்த சோதனையால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க்கும் வகையில் தலைமைச்செயலகம் மற்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகம் ஆகியவற்றில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முதல்வர் பதவியை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவுக்கு விடுக்கும் மறைமுக எச்சரிக்கையாகவே இந்த சோதனையை மத்திய அரசு நடத்தி வருவதாக ஒருபக்கம் கூறப்பட்டாலும், தவறு செய்த யாரும் தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த சோதனை நடந்து வருவதாக இன்னொரு பக்கம் கூறப்பட்டு வருகிறது,.

Leave a Reply

Your email address will not be published.