shadow

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு வருமான வரித்துறை நோட்டீஸ். பழிவாங்கும் நடவடிக்கையா?

sonia and rahulநேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் தனக்கும், ராகுல் காந்திக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு என்ற பிரபல பத்திரிகைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை புதிதாக தொடங்கப்பட்ட யங் இந்தியன் என்ற நிறுவனத்தின் பெயரில் அபகரிக்க முயன்றதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் மீது, சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு ஒன்று டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நேஷனல் ஹெரால்டு சொத்துகளை பரிமாற்றம் செய்தபோது முறைகேடாக வரி விலக்கு பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து சமீபத்தில் வருமான வரித்துறை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் விளக்கம் அளிக்க வேண்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வருமான வரித்துறை அனுப்பிய இந்த நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள சோனியா காந்தி, “நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதுபோன்ற அரசியல் வேட்டைகள், எங்களை மீண்டும் எழுச்சி பெறச் செய்யவும், வலிமையாக எதிர்த்துப் போராடவுமே உதவும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply