விடுமுறை நாளிலும் செயல்படும் வருமான வரி அலுவலகம்

விடுமுறை நாளிலும் செயல்படும் வருமான வரி அலுவலகம்

வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் அதை தாக்கல் செய்வதற்கு வசதியாக Qவரும் 29ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வருமானவரி அலுவலகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

நிதிஆண்டு 2016-17, 2017-18 ஆகியவற்றுக்கான வருமானவரி ரிட்டன்கள், 2016-17-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ரிட்டன்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய வரும் மார்ச் 31-ம் தேதி கடைசிநாளாகும்.

வருமானவரி செலுத்துவோர் ரிட்டன்களை தாக்கல் செய்யவும், அதுதொடர்பான துணை பணிகளுக்காகவும் அனைத்து வருமான வரி அலுவலகங்களும், அயக்கர் சேவா கேந்திரங்களும் வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை செயல்படும்.

மார்ச் 29, 30-ம் தேதி மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி காரணமாக அரசு விடுமுறையாக இருந்தாலும், அன்று வருமான வரி அலுவலகம் செயல்படும். நிதிஆண்டின் கடைசி வேலைநாள் வரும் 31-ம்தேதியாகும்.அன்றும் வருமானவரி அலுவலகமும், அயக்கர் சேவா கேந்திராக்களும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply