வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 23 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாக அண்மையில் வருமான வரித்துறை அறிவிக்க, தங்களுக்கும் நோட்டீஸ் வந்துவிடுமோ எனப் பலரும் குழம்பிப்போய்க் கிடக்கிறார்கள். இந்தக் குழப்பங்களுக்குத் தெளிவான பதில் பெற சென்னை வருமான வரி முதன்மை ஆணையர் எஸ்.ரவியைச் சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு விரிவான விளக்கம் தந்தார் அவர்.

?”வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவதாகச் சொல்லப்படுகிறதே… எவ்வாறு இது செயல்படுத்தப்படுகிறது?’

”வருமான வரித்துறையில் அத்தனை பிரிவுகளுமே கணினி மயமாக்கப்பட்டுள்ளது. வரி செலுத்து வோரின் படிவங்கள் அதாவது, ரிட்டர்ன்ஸ் முதலான அத்தனை பரிவர்த்தனைகளுமே கணினியில் பதிவு செய்யப்படுகின்றன. ஆகவே, இந்தத் துறையில், ஏறக்குறைய அத்தனைபேரின் தகவல்களையும் உள்ளடக்கிய டேட்டாபேஸ் எங்களிடம் தயாராக இருக்கிறது. இதை வைத்து கடந்த ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் வருமான அளவு எப்படி இருந்தது, தற்போது எப்படி தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது அல்லது தாக்கல் செய்யாமல் விடப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து, வரிச் செலுத்தியதில் தவறு செய்தவர் களையும் வரி தாக்கல் செய்யத் தவறி யவர்களையும் எங்களால் கண்டுபிடித்து நோட்டீஸ் அனுப்ப முடிகிறது.

தவிர, புது டெல்லியில் இருந்து செயல்படும் வருமான வரி இயக்குநர் (சிஸ்டம்ஸ்) அலுவலகம் மூலமாகவும், வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் வரி கணக்கு தாக்கலை நிறுத்தியவர்கள் (ஷிtஷீஜீதிவீறீமீக்ஷீs) அடங்கிய பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலும் நோட்டீஸ் அனுப்புகிறோம். சார் பதிவாளர் அலுவலகம், பெரிய ஒப்பந்ததார நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்தும் வரிச் செலுத்துவோரின் தகவல்கள் கிடைக்கப் பெற்று அதன் அடிப்படை யிலும் நோட்டீஸ் அனுப்புகிறோம்”.

?ஒருவருக்கு எந்தமாதிரி சூழ்நிலையில் வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வரும்?

”ஆண்டுதோறும் வரி கட்டப்பட வேண்டாத வருமானத் துக்கான வரம்பு (லிவீனீவீt ஷீஸீஸீஷீஸீtணீஜ்ணீதீறீமீ மிஸீநீஷீனீமீ) எவ்வளவு என்று மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. அந்த வரம்புக்குமேல் வருமானம், அதாவது, வரி கட்டவேண்டிய அளவுக்கு வருமானம் இருந்து, அது வருமான வரித்துறைக்குத் தாக்கல் செய்யப்படாமல் இருக்கும்பட்சத்தில், முதலில் மென்மையாக ஒரு கடிதம் அனுப்பி, வரிச் செலுத்துவோரிடம் இருந்து உண்மையான தகவல் கேட்டுப் பெறப்படுகிறது.

ரிட்டர்ன் மற்றும் கணக்கு தாக்கல் செய்த பின்னரும்கூட, வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வெளியில் இருந்துவரும் தகவல்களின்படி கணக்கு சரியாகத் தாக்கல் செய்யாமல் இருப்பதாக வலுவான சந்தேகம் இருப்பின், நோட்டீஸ் அனுப்பப்படும். இதுவும் அல்லாமல், விவரங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் நோட்டீஸ் அனுப்பப்படலாம்.”

?வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வருவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

”உங்கள் வருமானம், அதற்கான வரியை சரியாகக் கணக்கிட்டு, உரிய முறையில் அதை அரசுக்கு செலுத்தி, குறிப்பிட்ட கெடுவுக்குள் ‘ரிட்டர்ன்’ தாக்கல் செய்துவிட்டால், வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் என்கிற பேச்சுக்கே இடமில்லை.”

?வருமான வரியைப் பொறுத்தவரையில் மாதச் சம்பளதாரர்கள் எந்த விஷயத்தில் அதிகம் தவறு செய்கிறார்கள்?

”பொதுவாக, சம்பளதாரர்கள் தங்களது வருமான நிர்ணயம் மற்றும் வரிக் கணக்கிடுவதில் பெரிதாகத் தவறு இழைப்பதில்லை. நடைமுறை சார்ந்த சிறு பிழைகள்தாம் அதிகம் காண முடிகிறது. சரியான பான் எண் எழுதாமல் இருத்தல், வங்கிக் கணக்கு விவரங்கள் குறிப்பாக, எம்.ஐ.சி.ஆர் எண் போன்றவை விடுபட்டுப்போதல், கையெழுத்துப் போடாமல் ரிட்டர்ன் சமர்ப்பித்தல்; தொடர்புக்கான தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரி கொடுக்காமல் இருத்தல் போன்ற தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்கின்றனர்.”

?வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன தண்டனை?

”வரி கணக்கு குறித்த நேரத்தில் தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரி அதிகாரியினால் நோட்டீஸ் அனுப்பப்படும். அதன்பிறகும் வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில், வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 271-ன் கீழ் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், வருமான வரித்துறைக்குக் கனக்குகளைக் குறைத்து மதிப்பிட்டு, வரி கணக்கு சமர்ப்பித்தால் கூடுதல் வருமான வரி செலுத்துவதோடு நில்லாமல், ஏய்க்கப்பட்ட வரிக்கு மூன்று மடங்கு அளவுக்கு மிகாமல் அபராதம் செலுத்த வேண்டிவரும்.”

 

Leave a Reply