ஜெயலலிதா, சசிகலா மீதான வருமானவரி வழக்கை தள்ளுபடி செய்ய கோரிய மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா இருவரும் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டுவரை வருமானவரி தாக்கல் செய்யவில்லை. இதனால் இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்துவருகிறது.

இந்நிலையில் இருவர் மீதும் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுமீதான விசாரணை இன்று காலை நடந்தது. மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி, அந்த வழக்கை இன்னும் நான்கு மாதங்களில் விசாரணை செய்து முடிக்கும்படி கீழ்கோர்ட்டுக்கு உத்தரவுவிட்டுள்ளார்.

இதன்காரணமாக ஜெயலலிதா மற்றும் சசிகலா, வழக்கு விசாரணையை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா பெங்களூர் கோர்ட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கை சந்தித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

Leave a Reply