கொரோனா எதிரொலி

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏழை எளியோர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை வருமானம் இன்றி சிக்கலில் உள்ளனர்

இந்த நிலையில் வருமான வரி செலுத்துவோருக்கு ரீபண்ட் பணம், ரூ.5 லட்சம் வரை நிலுவை இருப்பவர்களுக்கு உடனடியாக விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் 14 லட்சம் பேர் பயன் அடைவர்

அதேபோல் சிறு குறு தொழில் துறையினர் உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் பேரின் ஜிஎஸ்டி மற்றும் சுங்க வரிகள் திருப்பி அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது இவர்களுக்கு சுமார் 18 ஆயிரம் கோடி அளவுக்கு லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது வருமான வரித்துறையின் இந்த அதிரடி முடிவால் வரி கட்டுபவர்கள் மகிழ்ச்சி அடைந்து விடுவார்கள்

மேலும் இந்த நிதியாண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலம் நீட்டிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply