shadow

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு: கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனங்களில் அதிரடி சோதனை
karthik
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் இன்று வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கப்பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான  Advantage Strategic Consulting என்ற நிறுவனத்திற்கு ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில்  தொடர்பு உள்ளதாக ஏற்கனவே சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அந்நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி சிதம்பரத்தின்  Advantage Strategic Consulting  நிறுவனம் ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்தத்தில் அதிகளவு ஆதாயம் அடைந்ததாக விசாரணையில் தெரியவந்ததாகவும், இதன் காரணமாவே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் அமலாக்க இயக்குனரக வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் தனது மகனின் நிறுவனத்திற்கு ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்தத்தில்  எவ்வித தொடர்பும் இல்லை என ப.சிதம்பரம் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Income tax department raid at Karthick Chidhambaram company

Leave a Reply