இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஜி.எல்.எல்.வி.– டி5 என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.
இது 3 நிலைகளை கொண்டது. 414 டன் எடையும், 49 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த ராக்கெட்டை ஜிசாட்–14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் கடந்த ஆகஸ்டு 19–ந்தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்த நேரத்தில் ஏவப்படுவதற்கு 75 நிமிடங்களுக்கு முன்பு ராக்கெட்டின் 2–வது தளத்தில் உள்ள உந்துவிசை டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து ராக்கெட் செலுத்துவது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.

அதில் ஏற்பட்ட ரிப்பேர் தற்போது சரி செய்யப்பட்டது. அதையடுத்து இந்த ராக்கெட் வருகிற ஜனவரி 5–ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவானின் 2 தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.

அதனுடன் ஜிசாட்–14 தகவல் தொடர்பு செயற்கைக்கோளும் அனுப்பப்படுகிறது. இந்த தகவலை இஸ்ரோ தலைவர் கே.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply