shadow

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த இம்சை அரசன் 2ஆம் புலிகேசி கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன் இயக்குகிறார். இவர் சமீபத்தில் விஜய் நடித்த ‘புலி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ‘பில்லா 2’ நடிகை பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கவுள்ளார். ஜிப்ரன் இசையமைக்கும் இந்த படம் முதல் பாகம் போலவே வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply