shadow

ஆன்மீக ஆலோசகரை 3வது மனைவியாக்கிய இம்ரான்கான்

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என கட்சியின் தலைவருமான இம்ரான்கான் மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.

ஏற்கனவே லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் மற்றும் டி.வி.தொகுப்பாளினி ரீசும் கான் ஆகிய இருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இம்ரான்கான், தற்போது 65வது வயதில் புஷ்ரா பிபி மேனகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்

புஷ்ரா பிபி மேனகா, கடந்த சில மாதங்களாக இம்ரான்கானுக்கு ஆன்மீக குருவாக இருந்ததாகவும், அவ்வப்போது புஷ்ரா பிபி மேனகாவிடம் ஆன்மீக ஆலோசனை பெற்று வந்த இம்ரான்கானுடன் காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த திருமணத்தில் இருவீட்டார் உறவினர்கள் மற்றும் இம்ரான்கான் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *