இம்ரான்கானின் 3வது மனைவி பிரிய நாய்கள் காரணமா?

இம்ரான்கானின் 3வது மனைவி பிரிய நாய்கள் காரணமா?

இம்ரான்கானின் வீட்டில் வளர்ந்து வரும் செல்ல நாய்களால் அவரிடம் இருந்து அவரது 3வது மனைவி பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கான், சமீபத்தில் 64வது வயதில் புஷ்ரா மனேகா என்பவரை திருமணம் செய்தார். புகுந்த வீட்டுக்கு வந்த புஷ்ரா, இம்ரான்கான் வீட்டில் வளர்ந்து வரும் நாய்களால் அலர்ஜி ஆனார்.

நாய்களை உடனே வீட்டை விட்டு விரட்ட அவர் இம்ரான்கானிடம் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் நாய்கள் மீது மிகுந்த பிரியம் வைத்திருந்த இம்ரான்கான் இதற்கு ஒப்புக்கொள்ளாததால் அதிருப்தி அடைந்த புஷ்ரா, தனது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இம்ரான்கான் ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply