தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும்.

12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெறும்.

11ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 10ம் தேதி வரை நடைபெறும்.

10ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 8ம் தேதி வரை நடைபெறும்