shadow

உதயநிதி படத்தில் தரலோக்கல் பாடல். இமான்

உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான், பாடல் கம்போசிங் பணியில் சுறுசுறுப்பாக உள்ளார்.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் பாடல் ஒன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதுவொரு தர லோக்கல் பாடல் என்றும் இந்த பாடலை பென்னி தியோல் மற்றும் சுனிதி செளஹான் பாடியுள்ளதாகவும் இமான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டி.இமானின் முந்தைய படங்களில் இடம்பெற்ற டண்டனக்கா உள்பட பல குத்துப்பாடலின் வரிசையில் இந்த பாடலும் மிகப்பெரிய வெற்றி பெரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரபல இயக்குனர் எழில் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி, ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே, சூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Leave a Reply