முதல் முறையாக வெங்கட் பிரபு படத்திற்க்கு இசையமைக்கும் இளையராஜா

முதல் முறையாக வெங்கட் பிரபு படத்திற்க்கு இசையமைக்கும் இளையராஜா

‘மாநாடு’, ‘மன்மத லீலை’ படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் ‘என்சி22’.

இதில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் வெங்கட்பிரபு முதல் முறையாக இளையராஜாவுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.