shadow

இளையராஜா குடும்பமே இசையமைக்கும் விஜய்சேதுபதியின் படம்

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு சமீபத்தில் பத்மவிபூஷன் விருது கிடைத்துள்ள நிலையில் அவரும் அவருடைய மகன்களான யுவன்ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் இணைந்து விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு இசையமைக்கவுள்ளனர்.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள படம் ‘மாமனிதன்’. தென்மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு முக்கிய தலைவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்திற்கு முதல்முறையாக இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் இணணந்து இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த தகவலை யுவன்ஷங்கர் ராஜா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்

இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜாவின் நிறுவனம் தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நாயகியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply