பப்ளிக் டாய்லட் அல்லது டிரெஸ்ஸிங் ரூமில் இந்த ஹேங்கர் இருக்கின்றதா? உடனே போலீஸிடம் தகவல் சொல்லுங்கள்

பப்ளிக் டாய்லட் அல்லது டிரெஸ்ஸிங் ரூமில் இந்த ஹேங்கர் இருக்கின்றதா? உடனே போலீஸிடம் தகவல் சொல்லுங்கள்

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் சமீபத்தில் மேலே உள்ள படத்தில் உள்ள துணி தொங்கவிடும் ஹேங்கர்களை பப்ளிக் டாய்லட்டில் இருந்து எடுத்து சோதனை செய்ததில் அதில் ரகசிய கேமிரா உள்ளடங்கியதை கண்டுபிடித்துள்ளனர். டாய்லட் அல்லது டிரெஸ்ஸிங் ரூமில் உடையை தொங்கவிடும் இந்த ஹூக் மூலம் பொதுமக்களின் அந்தங்கரங்களை படம் பிடித்து அதை இணையத்தில் உலவ விடும் ஒரு கும்பல் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

இந்த வகை ஹேங்கர்கள் இணையத்தில் வெறும் $25க்கு கிடைப்பதால் அதை வாங்கி பப்ளிக் டாய்லெட்டுகளிலும் ஷாப்பிங் காம்பளக்ஸில் உள்ள டிரெஸ்ஸிங் ரூமிலும் வைத்துவிட்டு பின்னர் மீண்டும் வந்து அதில் பதிவாகிய வீடியோவை எடுத்து செல்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது

எனவே இதுகுறித்து கூறிய புளோரிடா போலீசார் இதுபோன்ற ஹேங்கர்களை பொது இடத்தில் எங்கே பார்த்தாலும் உடனடியாக பொதுமக்கள் போலீசார் கவனத்துக்கு கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.