shadow

அவதார் சாதனையை முறியடிப்பாதே அடுத்த லட்சியம். அல்போன்ஸ் புத்திரன்

இந்திய படங்கள் என்றால் இந்தி படங்கள்தான் என்று ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’, எஸ்,எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ ஆகிய படங்கள் பல வட இந்திய கான் நடிகர்களின் படங்களின் வசூலை மிஞ்சிவிட்டது. இதனால் பாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தென்னிந்திய கலைஞர்கள் அடுத்து ஹாலிவுட்டையும் மிஞ்ச வேண்டும் என்றும் இதற்கு ரஜினியும் ராஜமெளலியும் ஒரு படத்தில் இணைய வேண்டும் என்றும் ‘பிரேமம்’ இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

ரஜினி – ராஜமெளலி இணையும் படம் நிச்சயம் ‘அவதார் சாதனையை முறியடிக்கும் என்றும் அதுவே தென்னிந்திய கலைஞர்களின் அடுத்த லட்சியமாக இருக்க வேண்டும் என்றும் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

Leave a Reply