shadow

அஜித்துக்கு கிடைத்த மிகப்பெரிய விருது. ரசிகர்கள் கொண்டாட்டம்
ibn
தல அஜித் கடந்த ஆண்டு ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘வேதாளம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இதில் ‘வேதாளம்’ திரைப்படம் ‘என்னை அறிந்தால்’ படத்தைவிட அதிக வசூல் செய்தபோதிலும், ‘என்னை அறிந்தால்’ படம் அஜித்துக்கு ஒரு முக்கிய படமாக கருதப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்ததற்காக அஜித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது ஒன்றும் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டுக்கான IBN Live Movie Award விருதுக்காக சமீபத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் மிகப்பெரிய வித்தியாசத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த அஜித் வெற்றி பெற்று சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அஜித்துக்கு 46.88 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி உள்ளார். இவருக்கு 42.58 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது.

அஜித், மம்முட்டி தவிர சிறந்த நடிகருக்கான விருது பட்டியலில் இருந்த கமல்ஹாசன், பிரபாஸ், சுதீப் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர்களுக்கு குறைந்த சதவீத வாக்குகளே கிடைத்துள்ளது.

அஜித்துக்கு IBN Live Movie Award விருது கிடைத்துள்ள செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *