முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் திடீர் ராஜினாமா

முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் திடீர் ராஜினாமா

தமிழக அரசியல் வட்டாரம் கடந்த சிலநாட்களாகவே பரபரப்பான சூழ்நிலையில் இருக்கும் நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் திடீரென தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்களாக இருந்த கே.என்.வெங்கடரமணன் மற்றும் ஏ.ராமலிங்கம் ஆகியோர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் இன்று முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியான சாந்தா ஷீலா நாயர் அவர்களும் ராஜினாமா செய்துள்ளார்.

முதல்வர் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தனது சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் அப்படி என்ன சொந்த காரணங்கள் அனைவருக்கும் ஒரேசேர வந்துவிட்டது என்பதே பொதுமக்களின் சந்தேகமாக உள்ளது.

Leave a Reply