shadow

ஒமிக்ரான் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படவில்லை என்று யூ.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு திட்டமிட்டபடி ஜனவரி 7, 8, 9 மற்றும் ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஐ.ஏ.எஸ் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், தேர்வு தேதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் யுபிஎஸ்சி கூறியுள்ளது.

மேலும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு இன்று முதல் தேர்வு முடியும் வரை தேவையான போக்குவரத்து சேவைகள் மற்றும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூபிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது