shadow

விராத் கோஹ்லியால் எனது பதவி பறிபோனது: 10 வருடங்களுக்கு பின் வென்சர்கார் குற்றச்சாட்டு

இந்திய அணி கேப்டனாக இருக்கும் விராத் கோஹ்லியை தான் கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்ததாகவும், அவரை அறிமுகம் செய்ததால்தான் தனது பதவி

பறிக்கப்பட்டதாகவும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் வென்சர்கார் குற்றஞ்சாட்டியுள்ளார்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2008-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டி ஒன்றில் அறிமுகமானார். அப்போது திலிப் வென்சர்கார் தேர்வுக் குழு தலைவராக

இருந்தார். இவர் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த விழாவிற்கிடையே, விராட் கோலியை அறிமுகப்படுத்தியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக

இருந்ததால், எனது பதவி பறிபோனது என்றார்.

இதுகுறித்து திலிப் வென்சர்கார் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா சென்று எமர்ஜிங் பிளேயர்ஸ் தொடரில் இந்தியா விளையாட இருந்தது. அப்போது 23 வயதிற்கு உட்பட்ட வீரர்களை

மட்டுமே அனுப்புவது என்று தேர்வுக்குழு முடிவு செய்தது. அந்த வருடம்தான் இந்திய அணி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை கைப்பற்றியிருந்தது. அந்த

அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தார். எமர்ஜிங் பிளேயர்ஸ் அணியில் விராட் கோலியை சேர்த்தோம். அந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளை நான் நேரில்

சென்று பார்வையிட பிரிஸ்பேன் சென்றிருந்தேன்.

விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தொடக்க வீரராக களம் இறங்கினார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் சில சர்வதேச வீரர்கள் இடம்பிடித்திருந்தார்கள். ஆனால், இந்திய

அணியில் சர்வதேச வீரர்கள் இடம்பெறவில்லை. இந்த போட்டியில் விராட் கோலி அவுட்டாகாமல் 123 ரன்கள் அடித்தார்.

விராட் கோலியை நாம் இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் என்று எண்ணினேன். இந்திய அணியில் விராட் கோலியை சேர்ப்பதற்கு சரியான சூழ்நிலையாக

இருந்ததாக கருதினேன். என்கூட இருந்து மற்ற நான்கு தேர்வாளர்களும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டனர். விராட் கோலியின் ஆட்டத்தை பெரிய அளவில் பார்த்திராத கேப்டன்

தோனி தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் ஆகியோர் தயக்கம் காட்டினார்கள். நான் அவர்களிடம், விராட் கோலி ஆட்டத்தை நான் பார்த்திருக்கிறேன். அவரை இந்திய

அணியில் சேர்க்க வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன்.

அப்போது இந்திய அணியில் விராட் கோலியை சேர்ப்பதா? தமிழகத்தைச் சேர்ந்த பத்ரிநாத்தை சேர்ப்பதா? என்ற விவாதம் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருந்த

சிலர் பத்ரிநாத்தை இந்திய அணியில் இடம்பெற வைக்க முயற்சி செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால், பத்ரிநாத் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர். விராட் கோலிக்கு

இடம் கிடைத்தால், பத்ரிநாத் வெளியே செல்ல வேண்டும். அப்போது என் ஸ்ரீனிவாசன் பிசிசிஐ பொருளாளராக இருந்தார். பத்ரிநாத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக

இருந்ததால், ஸ்ரீனிவாசன் மிகவும் அப்செட் ஆனார்.

ஸ்ரீனிசாவன் என்னிடம் எதன் அடிப்படையில் பத்ரிநாத் நீக்கப்பட்டார் என்று கேட்டார். அப்போது, நான் எமர்ஜிங் பிளேயர்ஸ் தொடரை பார்ப்பதற்கு ஆஸ்திரேலியா சென்றிருந்தேன்.

அப்போது விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்தேன். அவர் மிகவும் அற்புதமான வீரர். அப்படி இருக்கும்போது ஏன் அணியில் சேர்க்கக்கூடாது என்று விளக்கம் அளித்தேன். அவர்

என்னிடம் தமிழ்நாடு அணிக்காக பத்ரிநாத் 800 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் என்று வாக்குவாதம் செய்தார். அவரிடம், பத்ரிநாத்திற்கு வாய்ப்பு கிடைக்கும்போது கிடைக்கும்

என்றேன். எப்போது கிடைக்கும் என்று கேட்டார். அதற்கு, எப்போது என்று உங்களுக்கு சொல்ல முடியாது என்றேன்.

அடுத்த நாள் ஸ்ரீனிவாசன் ஸ்ரீகாந்தை அழைத்துக் கொண்டு, பிசிசிஐ தலைவராக இருந்த சரத் பவாரிடம் சென்றார். அப்புறம் என்னுடைய பதவிக்காலம் முடிவிற்கு வந்தது’’

என்றார்.

விராட் கோலி 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி தம்புல்லாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தொடக்க வீரராக களம் இறங்கிய

கோலி, 22 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவ்வாறு வென்சர்க்கார் பத்து வருடங்களுக்கு பின் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Reply