shadow

ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பு தெரிவிப்பேன்: கமல்ஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவிரைவில் அரசியலுக்கு தனிக்கட்சி ஆரம்பித்து களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினிக்கும் எனது எதிர்ப்பை பதிவு செய்வேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியபோது, ‘ ‘ரஜினி அரசியலுக்கு வந்து நியாயமாக இருந்தால் நல்லது நடக்கும். இல்லையென்றால் அவர் என் நண்பர் என்றாலும் என் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் அவருக்கும் இருக்கும்’ என்று கூறினார்

மேலும் சிஸ்டம் சரியில்லை என்று நான் தான் முதலில் கூறினேன். ஒன்றரை வருடங்களுக்கு முன் நான் கூறியதை ரஜினி வழிமொழிந்ததார். அவருக்கு எனது நன்றி என்று கூறினார்.

Leave a Reply