shadow

என்னை ஒதுக்குவதால் கட்சிக்கு நன்மை என்றால் ஒதுங்குவதற்கும் தயார். தினகரன்

தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் நேற்று திடீரென கூடி ஆலோசித்து சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவு செய்திருப்பதாக அதிரடியாக அறிவித்தனர். இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை தினகரன் இன்று கூட்டுவார் என்று செய்தி வெளிவந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ‘என்னையும் எங்கள் குடும்பத்தையும் ஒதுக்குவதக் கட்சிக்கு பயன் கிடைக்குமெனில் தான் கட்சியில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது:

”என்னிடம் அமைச்சர்கள் நேரடியாக பேசியிருந்தால் நானே ஒதுங்கி இருப்பேன். கட்சி பணியிலிருந்து நேற்றே ஒதுங்கி விட்டேன். பலத்தை காட்ட எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டவில்லை. ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கவலை. அமைச்சர்களுக்கு ஏற்பட்ட திடீர் அச்சமே, அவர்களது இந்த முடிவுக்கு காரணம். அவசர கதியில் எனக்கு எதிரான நிலையை எடுத்துள்ளனர்.

பொதுச்செயலாளரிடம் கலந்து பேசிய பின்னர் ராஜினாமா முடிவை எடுப்பேன். எனக்கு ஆதவளிக்கும் எம்.எல்.ஏ.,க்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டேன். கட்சிக்கு இடையூறு ஏற்படும் வகையில் நான் எப்போதும் நடந்து கொள்ள மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply