shadow

எடப்பாடி பழனிச்சாமியை நண்பன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன். தா.பாண்டியன்

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை விவகாரம் குறித்து திரிபுரா, புதுவை போன்ற சிறிய மாநிலங்களே தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில் தமிழக அரசு இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனமாக இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பாஜக பினாமி அரசுதான் பழனிச்சாமி அரசு என்று எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மைதானோ என்று நினைக்கும் வகையில் தமிழக அரசு உள்ளது.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மெளனம் குறித்து கூறியபோது, ‘இந்தியாவின் பல மாநில முதல்வர்கள் மாட்டுக்கறி தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ தடை குறித்து படித்துவிட்டு கருத்து கூறுகிறேன் என தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்து கொண்டு, ஜெயலலிதாவுக்கு இருக்கும் துணிச்சலில் ஒரு சதவீதம் கூட எடப்பாடிக்கு இல்லை. அவரை நண்பர் எனக் கூற மிகவும் வெட்கப்படுகிறேன்.

கால்நடைகளின் தலைமையகம் என கூறக்கூடிய அளவிற்கு கால்நடை வளர்ப்பும், அது சார்ந்த தொழில்களும் மலிந்திருக்கும் நாடு இந்தியா. இந்தியாவில் இருந்துதான் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு அன்னிய செலாவணி குவிகிறது. இந்த மாட்டிறைச்சி பொருளாதாரத்தை தடுக்கவே மோடி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.” என தா.பாண்டியன் அந்த கருத்தரங்கில் பேசினார்.

Leave a Reply