shadow

எனது படத்தை 100 நாட்கள் ஓட்ட வேண்டாம். ராஜமவுலி வேண்டுகோள்

bahubaliஇந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம், தென்னிந்தியாவில் அதிக கலெக்ஷன் செய்த படம், மிகப்பெரிய போஸ்டருக்காக கின்னஸ் சாதனை பெற்ற படம் என பல்வேறு சாதனைகள் படைத்த எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘பாகுபலி’ படம் இன்று 50வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 500 திரையரங்குகள் முதல் 1000 திரையரங்குகள் வரை ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதால் ஒரு திரைப்படம் ஒருவாரம் தொடர்ந்து ஓடினாலே வெற்றிப்படம் என கருதப்படுவதோடு ரூ.100 கோடி, ரூ.200 கோடி என்ற சாதனையை செய்துவிடுகிறது.

இந்த நிலையில் ‘பாகுபலி’ திரைப்படம் தொடர்ந்து 50 நாட்கள் ஓடி பெரும் சாதனையை செய்துள்ளது. இந்நிலையில் தனது பாகுபலி படம் தேவையான வெற்றியை பெற்றுவிட்டதால் சாதனைக்காக தனது படத்தை 100 நாட்கள் ஓட்ட வேண்டாம் என்றும், மற்ற படங்களுக்கு வழிவிடுங்கள் என்று அவர் பெருந்தன்மையுடன் தியேட்டர் அதிபர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply