மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி அதிரடியால் பெரும் பரபரப்பு

மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி அதிரடியால் பெரும் பரபரப்பு

பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவமரியாதையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வீரமணி உள்பட பெரியார் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊர்வலத்தில் நடந்தவையைத்தான் தான் பேசியதாகவும், இதுகுறித்து அன்றைய பத்திரிகைகள் விரிவாக புகைப்படத்துடன் செய்தி வெளிவந்துள்ளது என்றும் அந்த புகைப்படங்களின் ஆதாரத்தின் அடிப்படையிலும் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதன் அடிப்படையில் தான் நான் பேசினேன் என்று ரஜினிகாந்த் விளக்கியுள்ளார்.

எனவே இல்லாத ஒன்றையும் நடக்காத ஒன்றையும் நான் பேசவில்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார் மேலும் அந்த ஊர்வலத்தில் நடந்த சம்பவங்கள் மறுக்கப்பட வேண்டியது அல்ல என்றும், மறக்கப்பட வேண்டியது என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்

Leave a Reply