shadow

விஜய்க்கு வில்லனாக நடிக்க முடியாது. அஜீத் மனிதநேயம் உள்ளவர். அரவிந்தசாமி
aravindasamy
சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் என்றால் அது ‘தனி ஒருவன்’ படம் என்று அனைவரும் கூறும் அளவுக்கு இந்த படம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்துள்ளது. நேற்று ‘பாயும் புலி’, சவாலே சமாளி போன்ற படங்கள் வெளியானபோதிலும், இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றிகரமாக ‘தனி ஒருவன்’ ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று வில்லன் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்ததுதான் என்று அனைவரும் கூறுகின்றனர். இந்நிலையில் அரவிந்தசாமி நேற்று டுவிட்டரில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இந்த உரையாடலில் விஜய் ரசிகர் ஒருவர் அரவிந்தசாமியிடம் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் வில்லனாக நடிப்பீர்களா? அல்லது அண்ணனாக நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்டார். இந்த கேள்விக்கு பதிலளித்த அரவிந்தசாமி, ‘இரண்டும் இல்லை’ என்று பதிலளித்துள்ளார். மேலும் எந்த நடிகருக்கும் வில்லனாக நடிக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த வில்லன் கேரக்டர் வலிமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அஜீத் பற்றி ஒருசில வார்த்தைகள் கூறும்படி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அரவிந்தசாமி, ‘ஜீத்தை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். நல்ல மனிதநேயமுள்ள ஒரு மனிதர் அவர்’ என்று பதிலளித்துள்ளார். அஜீத், விஜய் குறித்து அரவிந்தசாமி கூறிய இந்த பதில்கள் டுவிட்டரில் அஜீத்-விஜய் ரசிகர்களிடையே மீண்டும் ஒரு சொற்போரை ஆரம்பித்துவிட்டதே என்றே கூறலாம்.

Leave a Reply