shadow

விஜய் படத்தில் நடிக்கவில்லை. நயன்தாரா

nayanthara latest photos galleryகோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா தற்போது கார்த்தி நடிக்கும் ‘காஷ்மோரா’ மற்றும் விக்ரம் நடிக்கும் ‘இருமுகன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 100வது படத்தில் நயன்தாரா  நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசியலில் இருந்து மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ள தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த ‘கத்தி’ படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். சிரஞ்சீவியின் 150வது படமான இந்த படத்தில் சமந்தா கேரக்டரில்  நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் இதற்காக அவருக்கு ரூ.4 கோடி சம்பளமாக பேசப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் இந்த தகவலை நயன்தாரா மறுத்துள்ளார். இதுவரை சிரஞ்சீவியிடம் இருந்தோ தயாரிப்பாளரிடம் இருந்தோ ‘கத்தி’ ரீமேக்கில் நடிக்க தன்னிடம் யாரும் அணுகவில்லை என்றும் இது முழுக்க முழுக்க பொயான தகவல் என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமிழில் நடித்த சமந்தாவே நடிப்பார் என கூறப்படுகிறது

இந்த செய்தியையும் தயவுசெய்து படியுங்கள்

நயன்தாரா படத்தின் டைட்டில் ‘டிக் டிக் டிக்’ இல்லை

Nayanthara_Manirathnam nayanthara-to-be-banned nayanthara-saree-still-from-greeku-veerudu-movie-1 sexy-nayanthara-hot_720_southdreamz nayanthara

Leave a Reply