shadow

kamal and ramesh

கமல்ஹாசன் இருவேடங்களில் நடிக்கும் உத்தமவில்லன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ஊர்வசி, ஆண்ட்ரியா, பூஜா குமார், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கமல்ஹாசன் கதை, திரைக்கதை வசனம் எழுதும் இந்த படத்தின் வசனத்தை கிரேசி மோகன் இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் நடிகரும் கமல்ஹாசனின் நண்பருமான ரமேஷ் அரவிந்த் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான உத்தமவில்லன் போஸ்டர் வடிவமைப்பு முழுவதும் கமல் ஆலோசனையின்பேரில் டிசைன் செய்யப்பட்டது என்றும், இயக்குனர் ரமேஷ் அரவிந்த்தின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறியதாவது: கமல் ஒரு ஜீனியஸ். அவருடைய ஆலோசனைகளை நான் ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கிவிட நான் ஒன்றும் முட்டாள் இல்லை. திரைப்படம் என்பதே ஒரு கூட்டு முயற்சிதான். அனைவருடைய ஆலோசனைகளையும் பரிசீலிக்கப்பட்டு பின்னர் ஒருசில ஆலோசனைகள் நிராகரிக்கப்படுவது வழக்கம்தான். எனவே என்னுடைய ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை ” என்று கூறியுள்ளார்.

Leave a Reply