shadow

 நான் ஒன்றும் பெரிய ஸ்டார் கிடையாது. ரஞ்சித்திடம் மனம் விட்டு பேசிய ரஜினி

kabaliசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ள இயக்குனர் ரஞ்சித், படப்பிடிப்புக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தீவிரமாக கவனித்து வருகிறார். ஆரம்பகட்ட பணிகள் யாவும் முடிவடைந்து, படக்குழுவினர் அனைவரையும் தயார் நிலையில் வைத்துள்ள ரஞ்சித்துக்கு ரஜினி முழு சுதந்திரம் கொடுத்ததால்தான் இந்த அளவுக்கு சுறுசுறுப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

படத்தை ஆரம்பிக்கும் முன்னரே ரஞ்சித்தை அழைத்த ரஜினி, ‘இது உங்கள் படம். நான் உங்கள் படத்தில் நடிக்கும் நடிகன். அவ்வளவுதான். இந்த படத்தை பொருத்தவரை நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் வரை யாரை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்யலாம். நான் ஒன்றும் பெரிய ஸ்டார் கிடையாது. மக்களின் ஆசிர்வாதத்தாலும், அவர்கள் என்னை நேசிப்பதாலும்தான் நான் இன்னமும் நடித்துக்கொண்டிருக்கிறேன்’ என்று கூறினாராம்.

மேலும் ரஜினியின் கதாபாத்திரம் உள்பட அனைத்து கதாபாத்திரங்களையும் நீங்கள் விரும்பியபடி உருவாக்கிக்கொள்ளலாம்” என ரஞ்சித்துக்கு ரஜினி முழு சுதந்திரம் கொடுத்துள்ளதால் அவருடைய முடிவின்படியே ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே, மகளாக தன்ஷிகா, மற்றும்பிரகாஷ் ராஜ், அட்டக்கத்தி தினேஷ் மற்றும் (மெட்ராஸ்) கலையரசன் ஆகியோர்களை இந்த படத்திற்காக தேர்வு செய்துள்ளாராம். இந்த படத்தில் ரஜினி கதாபாத்திரத்தின் ஆரம்பகால வாழ்க்கை குறித்த காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை மயிலாப்பூரிலும், மற்ற காட்சிகள் மலேசியாவிலும் நடக்க உள்ளது

Leave a Reply