இனிமேல் இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்

இனிமேல் இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்

விஜய் இயக்கிய ‘மதராசபட்டணம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமிஜாக்சன். இவர் தற்போது ரஜினியின் ‘2.0’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு வேறு தமிழ் படங்கள் கைவசம் இல்லை. பாலிவுட்டிலும் படம் இல்லாததால் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் மொராக்கோ நாட்டிற்கு சென்றிருந்த நடிகை எமிஜாக்சன் இனிமேல் அங்கேயே தங்கிவிட முடிவு செய்திருப்பதாகவும் இனிமேல் இந்தியாவுக்கு திரும்பும் எண்ணம் இல்லை என்றும், இந்த நாட்டின் அழகிய இயற்கை காட்சிகள் தன்னை கவர்ந்துள்ளதாகவும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்

இருப்பினும் அவர் லண்டனில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு அவ்வப்போது சென்று வருவார் என்று கூறப்படுகிறது

I am moving to moracco and never come back says Amy jackson

Leave a Reply