shadow

எனக்கும் ஜெயலலிதாவுக்கு தாய்-மகள் உறவு உள்ளது. தீபா பேட்டி

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்றிரவு திடீரென சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று தியானம் செய்தார். சுமார் ஒரு மணி தியானம் செய்த தீபா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், எனக்குமான உறவு தாய் – மகள் உறவு போன்றது என்று தீபா கூறினார். மேலும் தான் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதை விரும்பாத சிலர் மிரட்டல் கொடுத்து வருவதாகவும், ஆனால் அதிமுக தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருப்பதால் எந்த மிரட்டலுக்கும் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து தடைகளையும் தகர்த்து ஆர்கே நகரில் வெற்றி பெறுவேன் என்றும் திமுக, சசிகலா தரப்பு தவிர்த்து யார் ஆதரவு அளித்தாலும் ஏற்க தயார் என்றும் தீபா மேலும் கூறினார்

Leave a Reply