நான் தான் ஜெயலலிதாவின் மகள்: டி.என்.ஏ சோதனைக்கு தயார்: அம்ருதா

நான் தான் ஜெயலலிதாவின் மகள்: டி.என்.ஏ சோதனைக்கு தயார்: அம்ருதா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் தான் என்றும், ஜெயலலிதாவின் சமாதியை தோண்டி எடுத்து அவருடைய டி.என்.ஏவை சோதனை செய்தால் அது உண்மை என்று தெரிந்துவிடும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் மஞ்சுளா என்ற அம்ருதா வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மேலும் ஜெயலலிதாவின் உடலுக்கு வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்றும் அதற்காக மெரீனாவில் உள்ள அவரது உடலை தோண்டி எடுக்க வேண்டும் என்றும் தனது மனுவில் அம்ருதா குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மகளான தன்னை அவருடைய சகோதரி ஷைலஜா வளர்த்ததாகவும், ஷைலஜா கடந்த 2015ஆம் ஆண்டும், வளர்ப்பு தந்தையாக இருந்த சாரதி என்பவர் கடந்த மார்ச் மாதமும் இறந்துவிட்டதாகவும் அவர் தனது மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு வருமா? அல்லது தள்ளுபடி செய்யப்படுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்

Leave a Reply