shadow

இனி வருங்காலத்தில் ரோபோக்கள் தான் போலீஸ்: பிள்ளையார் சுழி போட்ட ஐதராபாத்

இந்தியாவில் ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் ரோபோக்களின் அபார வளர்ச்சி மேலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு துறையாக புகுந்த ரோபோ தற்போது காவல்துறையிலும் புகுந்துவிட்டது. ஆம், நேற்று தெலுங்கானா மாநிலத்தில் காவல்துறை ரோபோ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகரில் புதிய ரோபோ ஒன்றை ஹெச்-பாட்ஸ் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த தகவலை தெலங்கானா அரசின் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலா் ஜெயேஷ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

பேபட்டா வொ்ஷனில் இந்த ரோபோ மனித உருவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது காவல் பணியை மேற்கொள்ளும். மனிதா்களை இனம் காணவும், புகார்களை பெறவும் இந்த ரோபோவால் முடியும்.

ரோபோவில், கேமரா, சென்சார்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. பொது இடங்களான விமான நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் பணியில் இந்த வகை ரோபோக்களை பயன்படுத்தலாம். ரோபோவின் விலை 5 லட்சம் ரூபாய் என்றும், இந்த ரோபால் 360 டிகிரி கோணங்களிலும் திரும்பி என்ன நடக்கிறது என்பதனை காண முடியும்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply