ஆப்கன் பிரச்சனையால் ஐதராபாத் பிரியாணி விலை உயர்வு!

ஆப்கன் பிரச்சனை காரணமாக ஐதராபாத்தில் பிரியாணி விலை ஏறி இருப்பதாக செய்தி வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த பிரியாணியில் பயன்படுத்தப்படும் உலர்பழங்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து பாகிஸ்தான் வழியாக உலர் பழங்களை இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த இறக்குமதியாகி தாலிபான்கள் தடை செய்துள்ளனர்

இதன் காரணமாக இந்தியாவுக்கு கடந்த சில நாட்களாக உலர் பழங்கள் வரவில்லை என்றும் அதனால் ஹைதராபாத் பிரியாணி விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
அதேபோல் ஆப்கன் நாட்டில் இருந்து கிடைத்து வந்த அவால்நட், அப்ரிகோட் மற்றும் பாதாம் ஆகியவை வரத்து சுத்தமாக நின்று விட்டதால் அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் உலர் பழங்கள் இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்