shadow

htc-bolt-leak-720x480தைவானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் HTC நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு என ரசிகர் கூட்டம் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் தண்டர்போல்ட் ஸ்மார்ட்போன்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது HTC போல்ட் என்னும் புதிய மாடல் ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளது.

ஆண்ட்ராய்டு வகை ஸ்மார்ட்போன் ஆன HTC போல்ட் மாடலில் என்னென்ன புதுமைகள் உள்ளன என்பதை பார்ப்போம்

HTC போல்ட் மாடலின் டிஸ்ப்ளே எப்படி?

சமீபத்தில் வெளியான HTC 10 மாடலில் இருந்தது போலவே 5.2 இன்ச் QHD டிஸ்ப்ளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே ஏற்கனவே HTC 10 மாடலில் நல்ல வரவேற்பினை பெற்றதை போலவே இந்த மாடலிலும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HTC போல்ட் மாடலின் கோட் நேம் என்ன?

ஒருசில செய்தி நிறுவனங்களில் இருந்து லீக் ஆன தகவலின்படி பார்த்தால் இந்த மாடலின் கோட் நேம் ‘அகாடியா’ (Acadia) என்று கூறப்படுகிறது.

இதுதான் முதல்முறையாமே!! தெரியுமா உங்களுக்கு?

Andraoid Nougat மாடலில் வெளிவரும் முதல் HTC ஸ்மார்ட்போன் HTC போல்ட் மாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. Andraoid Nougat உபயோகிப்பதற்கு மிகவும் எளிமையான வசதியான அம்சம் என்பதால் வாடிக்கையாளர்கள் இவ்வகை போன்களுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

லேசர் ஆட்டோ போகஸ் இல்லையே

HTC போல்ட் மாடலில் லேசர் ஆட்டோ ஃபோகஸ் டெக்னாலஜி இல்லை. இதே நிறுவனத்தின் HTC 10 மாடலிலும் இந்த வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இந்நிறுவனத்தின் டுவிட்டரிலும் உறுதி செய்துள்ளது.

ரிலீஸ் எப்போது?

வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த HTC போல்ட் மாடல் அமெரிக்காவில் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்த மாடல் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற உறுதியான தகவல் இதுவரை இல்லை

Leave a Reply