shadow

டிஜிட்டல் பணவர்த்தனைக்கு ‘பீம்’ ஆப்ஸ். மத்திய அரசு அறிமுகம்

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவித்தபின்னர் ஏற்பட்டுள்ள பணப்பற்றாக்குறையை போக்க பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் சுலபமாக்கும் வகையில் மத்திய அரசு ‘பீம்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் ப்ளேஸ்டோரில் சென்று //play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp லிங்கில் பீம் செயலியை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதன்பின்னர் உங்கள் வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்து யுபிஐ எண் உருவாக்கி கொள்ள வேண்டும். அதன்பின்னர் இந்த எண்ணை பயன்படுத்தி மிக எளிதில் பணத்தை அனுப்பவோ பெற்று கொள்ளவோ முடியும்.

முதல்கட்டமாக இந்த செயலி பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி உட்பட முக்கிய வங்கிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதில் இணைக்கப்படாத வங்கிகளில் கணக்கு உள்ளவர்கள் தங்களுடைய வங்கியின் ஐஎப்எஸ்சி (IFSC) எண்ணை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்யலாம்.

இந்த ஆப்ஸை பயன்படுத்த மொபைல் எண் தவிர பணப்பரிவர்த்தனை முகவரியையும் உருவாக்கிக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் எளிதாக பணத்தை பரிவர்த்தனை செய்ய கியூஆர் குறியீடும் உள்ளது.

இப்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மொழிகளிலும் இந்த ஆப்ஸை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

Leave a Reply