20 மணி நேரத்தை அரை மணி நேரமாக மாற்றுவது எப்படி? எடிட்டர் முன் நிற்கும் சவால்

20 மணி நேரத்தை அரை மணி நேரமாக மாற்றுவது எப்படி? எடிட்டர் முன் நிற்கும் சவால்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள கவண் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை மட்டுமே சுமார் 20 மணி நேரக் காட்சிகளாக படமெடுத்துள்ளாராம் இயக்குனர் கே.வி.ஆனந்த்

இந்த  20 மணி நேரக் காட்சிகள்  தற்போது படத்தொகுப்பாளர் அந்தோணி ரூபனின் டேபிளில் வைக்கப்பட்டுள்ளடாம். இந்த  20 மணி நேரக் காட்சிகளை அரை மணி நேர காட்சியாக எடிட் செய்யும் சவாலான பணி தற்போது அவர் முன் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள எடிட்டர், ‘இந்த பணி தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு சவால் என்று கூறியுள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர்கள் சுபா கதை வசனம் எழுதியுள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.