shadow

பொங்கல் சிறப்பு பேருந்துகளாக தனியார் பேருந்துகளை இயக்க அரசு திட்டம்

பொங்கல் தினத்தன்று சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சுமார் 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் கடந்த ஏழு நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருவதால் தற்போது சிறப்பு பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமாவது சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்காக தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகளை பெற்று சிறப்பு பேருந்துகளாக இயக்கவும், அந்தந்த நிறுவனங்களின் ஓட்டுனர்களையே பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இதுகுறித்த முறையான அறிவிப்பை இன்று மாலை போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பார் என கூறப்படுகிறது. ஆனாலும் இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு ஊருக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலைதான் உல்ளது.

Leave a Reply