கொரோனா உயிர்ழந்தவர்களின் குடும்பங்கள் நிவாரண தொகை பெறுவது எப்படி?

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நிவாரண தொகை பெறுவது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ கொரோனா பெருந்தொற்றினால்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினர்‌ வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000/- (ரூபாய்‌ ஐம்பதாயிரம்‌ மட்டும்‌) நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்‌, உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினர்‌ வாரிசுதாரர்கள்‌ அரசின்‌ இழப்பீட்டு உதவித்‌ தொகை பெறுவதை எளிமையாக்கும்‌ வகையில்‌ https://www.tn.gov.in என்னும்‌ தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில்‌ “வாட்ஸ்‌ நியூ whats new பகுதியில்‌ Covid-19 என்னும்‌ விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பம்‌ செய்து உதவித்‌ தொகை
பெறலாம்‌ என தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.