தமிழகத்தில் ஆறு முதல் ஏழு காங்கிரஸ் உள்ளது: எஸ்.வி.சேகர்

தமிழகத்தில் ஆறு முதல் ஏழு காங்கிரஸ் உள்ளது: எஸ்.வி.சேகர்

பேட்டி என்றாலும் சமூக வலைத்தள பதிவு என்றாலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர் எஸ்.வி.சேகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த எஸ்.வி.சேகர், தான் இரண்டு மாதங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நான் காங்கிரஸ் கட்சியில் இரண்டு மாதம் தான் இருந்தேன், அதுவும் ராகுல் காந்தி என்னை அழைத்தார் என்பதற்காக மட்டுமே. அவர் என்னை தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைய சொன்னார், நான் தமிழகத்தில் உள்ள எந்த காங்கிரஸ் கட்சியில் இணைவது என்று கேட்டேன்; காரணம் இங்கேயே ஆறு முதல் ஏழு காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. இந்த ஒரு கேள்விக்காக என்னை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர் என்று கூறினார்

Leave a Reply