உங்களையெல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது: கொரோனா குறித்த அதிர்ச்சி வீடியோ\

கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமெனில் இப்போதைக்கு ஒரே வழி சமூக விலகல் மட்டும் தான். வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும், அப்படியே அத்தியாவசிய தேவைகளின் காரணமாக வெளியே வந்தாலும் ஒருவருடன் ஒருவர் ஒட்டாமல் பல அடிகள் தள்ளி நிற்க வேண்டும் என்பதே இந்த வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று மாலை மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி சொல்லும்விதமாக அவரவர் வீட்டிலிருந்து அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர் ஆனால் ஒரு சிலர் இதை தவறாக புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து நடு தெருவில் கூட்டமாக கூடி ஆட்டமாடி பாட்டுப் பாடி நன்றி தெரிவிக்கின்றேன் பேர்வழி என்ற கணக்கில் வைரசை பரப்பி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த மாதிரி ஆட்களை வைத்துக்கொண்டு எப்படி கொரோனாவை ஒழிக்க முடியும் என்றும் இவர்கள் போன்ற ஆட்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply