பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிம்பு: உறுதி செய்தது ஹாட்ஸ்டார்!

கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து திடீரென கமல்ஹாசன் விலகியதால்அவருக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவார் என்று செய்திகள் வெளியானது தெரிந்ததே.

நேற்று புரோமோ வீடியோவுக்காக சிம்பு மேக்கப் போட்ட புகைப்படம் வைரலான நிலையில் இன்று ஹாட்ஸ்டார் அதிகாரபூர்வமாக சிம்புவின் புகைப்படத்தை வெளியிட்டு சிம்பு தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்பதை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது.

மேலும் ஹாட்ஸ்டாரில் சிம்புவின் புரமோ வீடியோவும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.