செல்போன் பேட்டரியால் தீக்குளித்த பாகிஸ்தான் இளைஞர். அதிர்ச்சி வீடியோ

செல்போன் பேட்டரியால் தீக்குளித்த பாகிஸ்தான் இளைஞர். அதிர்ச்சி வீடியோ
cellphone
தற்போதைய விஞ்ஞான உலகில் செல்போன் இல்லாதவர்களை பார்க்க முடியாது. ஆனால் இந்த செல்போனே சிலசமயம் அவர்களது உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் இருந்துள்ளது என்பதை நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் நாட்டில் உள்ளஒரு இளைஞர் தனது பாக்கெட்டில் செல்போனை வைத்து கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனின் பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. இதனால் அவருடைய உடையும் உடலும் எரிய ஆரம்பித்தது.

சாலையின் நடுவில் அலறியபடியே ஓடிய அவர் மீது அருகில் இருந்த சிலர் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். தற்போது அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். அதிக நேரம் போன் பேசிவிட்டு பின்னர் செல்போனை அவர் பாக்கெட்டில் போட்டதாகவும், அந்த நேரத்தில் செல்போன் பேட்டரி திடீரென வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=I1fLcXT6JJU

Chennai Today News: Horrifying video shows man engulfed in fire after phone battery caught fire in his pocket

Leave a Reply